பிரசாதம் இது பிரமாதம்: களி
தேவையானவை:
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2 (தூளாக்கியது)
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின்பு அரிசியை நன்கு வறுக்கவும். மிக்ஸியில் பருப்பு, அரிசியை ரவை போல் பொடியாக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 2 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும். நன்கு கரைந்தும் வடிகட்டி, கொதிக்க ஆரம்பித்ததும், நெய் விட்டு, பொடி செய்த ரவைகளை சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து கட்டி சேராமல் நன்றாக கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். சிறிது நேரம் மூடியால் மூடி வேகவிடவும். நடுநடுவே கிளறி விடலாம். வெந்ததும் தேங்காய் துருவல், ஏலப்பொடி துாவி இறக்கவும்.
நிறத்தை குறை சொல்லாதீர்!
ஒருமுறை அபூதர்கிபாரி என்பவர் தன் அடிமையுடன் வந்தார். நபிகள் நாயகத்தின் முன்னிலையில் அடிமையிடம் சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் அடிமையை நோக்கி,“கருத்தபெண்ணின் மகனே” என்று சொல்லி திட்டினார்.
நாயகத்திற்கு கோபம் வந்தது.
“நீர் இந்த அடிமை பற்றி சொன்ன வார்த்தைகள் கடுமையானவை. நிறத்தால் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. செயல்களால் அன்றி நிறத்தால் மட்டுமே ஒருவன் உயர்ந்தவனாக முடியாது” என்றார்.
உண்மையை அறிந்த அபூதர்கிபாரி, “நீர் என் கழுத்தில் மிதியும்; இதுவே நான் செய்த தவறுக்கு பரிகாரம்” என அடிமையிடம் வேண்டினார். கருப்பு என்பதற்காக ஒருவரை மணம் புரிய மறுப்பது, கேலி செய்வது, கேவலமாக கருதுவது கூடாது. மனிதனை அளக்க அவனது நல்ல பண்பே அளவுகோல்.