உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்கள் விருப்பம் எது

உங்கள் விருப்பம் எது

“உங்களது பொருட்கள் மீது விருப்பமா? இல்லை வாரிசுகளின் பொருட்கள் மீது விருப்பமா?” என தோழர்களிடம் கேட்டார் நாயகம்.

“ எங்கள் பொருட்கள் மீது தான் விருப்பம்” என்றனர்.  அதற்கு,“உங்களுடைய பொருள் என்றால், அது இறைவனுக்காக செலவு செய்யும் பொருளாகும். மறுமையில் அதுவே பலனளிக்கும். நீங்கள் விட்டுச் செல்லக் கூடிய பொருட்கள் உங்கள் வாரிசுகளின் பொருளாக மாறி விடும். அதனால் உங்களுக்கு பலன் கிடைக்காது. உங்களின் பொருட்களை இறைவழியில் செலவிடுங்கள்” என்றார். உள்ளதே போதும்  “நபிகளாரே! என் மகளுக்கு நோயால் தலைமுடி கொட்டி விட்டது. செயற்கை முடி கட்டலாமா?” எனக் கேட்டார் ஒருவர் ” செயற்கை முடியை சேர்த்து கட்டுபவர் மற்றும் கட்டப்படுபவரை இறைவன் சபிக்கிறான்” என்றார். அதாவது சடை கட்டுபவளை மட்டுமல்ல, கட்டி விடுபவளும் இறைவனின் கோபத்துக்கு ஆளாவர். எனவே, இருக்கிற கூந்தலை பராமரித்தால் போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !