உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் உற்சவ விழா துவக்கம்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் உற்சவ விழா துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர், 1,002ம் ஆண்டு திருஅவதார விழா, இன்று துவங்குகிறது.

ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர். ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இங்கு, ஆண்டு தோறும் சித்திரை, திருவாதிரை நட்சத்திரம் அன்று ராமானுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு, ராமானுஜரின், 1,002வது திரு அவதார உற்சவ விழா இன்று துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !