சிறுபாக்கம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED :2401 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே துரோபதை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் துரோபதை அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதத்தை யொட்டி, தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தினசரி அம்மன் வீதியுலா வந்தது.நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந் தனர். தொடர்ந்து அரவாண் களபலி, காலி கோட்டை அழித்தல், மாடு திருப்புதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6:00 மணியளவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.