உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரியில் பகவதி அம்மன் வீதி உலா

கோத்தகிரியில் பகவதி அம்மன் வீதி உலா

 கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில், கேரளா பகவதி அம்மனின் வீதி உலா நடந்தது.


கோத்தகிரி கடைவீதி அருள்மிகு மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, 17-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடந்து வருகிறது. பகல் 1:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, மறுநாடன் மலையாள மக்களின் உபயத்தில், அம்மன் வண்ண விளக்குகள் ஒளிர, அம்மன் கேரளா பகவதி அவதாரத்தில், வீதிஉலா வந்து, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !