கிருஷ்ணராயபுரம் பகவதி கோவிலுக்கு பால் குட ஊர்வலம்
ADDED :2722 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில், மலையாள பகவதியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பால குட ஊர்வலம் நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஏப்., 28ல்) இரவு, மலையாளசாமி அழைத்து வருதல், அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. நேற்று (ஏப்., 29ல்) காலை, திருக்கண்மாலீஸ்வரர் காவிரி கரையில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (ஏப்., 30ல்) மதியம், பக்தர்கள் கோவில் முன் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் தேரோட்டம், கிடா வெட்டுதல் நடக்கிறது.