பழையசீவரம் மன்னேரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
ADDED :17 hours ago
வாலாஜாபாத்: பழையசீவரம், மன்னேரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் மன்னேரியம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். நேற்று இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார்.