காரமடை கோவிலில் கிருஷ்ணபட்ச ஏகாதசி விழா
ADDED :2725 days ago
கோவை:தமிழ் புது வருஷமான விகாரி ஆண்டின், முதல் ஏகாதசி திதியான கிருஷ்ணபட்ச ஏகாதசியை ஒட்டி நேற்று காரமடை அரங்கநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதியை யொட்டி காரமடை ரங்கநாதர் திருக்கோவிலில், சுவாமிக்கு அதிகாலை, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில் சகலவித திரவியங்களில் ரங்கநாதருக்கும், ஸ்ரீதேவி,பூதேவியருக்கும் அபிஷேகம் நடந்தது. ஏக காலத்தில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோபூஜை, கோதரிசனம் ஆகியவற்றைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் முதல் ஏகாதசி என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்..