காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் 4ல் ஆலோசனை
ADDED :2449 days ago
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து, அத்தி வரதர் வெளியில் வரும் வைபவ விழா ஏற்பாடுகளுக்காக, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர், வரும், 4ம் தேதி, கோவிலை பார்வையிட்டு, ஆலோசிக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில், அத்தி வரதர், சயன கோலத்தில் உள்ளார்.பெருமாள், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வெளியில்
வரும் வைபவம், வரும் ஜூலை, 1ல் நடைபெறுகிறது.
இவ்விழாவுக்காக, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், பனீந்தர ரெட்டி, 4ம் தேதி, வரதராஜ பெருமாள் கோவிலை பார்வையிடுகிறார். குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்படும் அத்தி வரதரை, 48 நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்காக எந்த இடத்தில் வைக்கலாம். அதற்கான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை குறித்து, கலெக்டர் மற்றும் கோவில் ஊழியர்களிடம், அவர்
ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.