காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகம்
ADDED :2449 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, மே, 9ல், கொடியேற்றத்துடன்துவங்குகிறது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் மத்தியில் சோமாஸ்கந்த மூர்த்தமாக, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், வைகாசி விசாகப்பெருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு உற்சவம், மே, 9ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 20ல், கேடயம் மங்களகிரி
உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.