உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் மாங்கனி திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம்

 காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா வரும் ஜுலை 14ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 15ம் தேதி பரமதத்தர் மற்றும் அம்மையார் ஆகியோருக்கு திருக்கல்யாணம், 16ம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.இதையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்து பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவலர் வாரியக்குழு தலைவர் கேசவன். துணை தலைவர் ஆறுமுகம். செயலர் பக்கிரிசாமி. ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !