பேரையூரில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா
ADDED :2370 days ago
பேரையூர்: பேரையூர் என்.முத்துலிங்காபுரம் அருகே நல்லமரம் மீனாட்சிபுரம் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 24 கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்றிரவு கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவங்கி பெண்கள் முளைப்பாரி வளர்த்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (மே., 3ல்) சுவாமி கண் திறக்கும் நிகழ்ச்சி, முளைபாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை பரமன் பூஜாரி, நாட்டாமை பாஸ்கரன் செய்தனர்.