ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு
ADDED :2396 days ago
ஊத்துக்காடு: வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோற் சவம், 24ல் துவங்கியது.
தினமும், பல வித வாகனங்களில், எல்லம்மன் எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (மே., 5ல்), வசந்த உற்சவம் நடந்தது. இதில், ஊத்துக்காடு சுற்றியுள்ள பல கிராம மக்கள், அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.