உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை கரியமாணிக்கர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

ஊத்துக்கோட்டை கரியமாணிக்கர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

ஊத்துக்கோட்டை:கரியமாணிக்க பெருமாள் கோவிலில், 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம் மோற்சவ விழா, வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது கமல வல்லி நாயிகா சமேத கரிய மாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் வார்ஷிக பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது.

வரும், 16ம் தேதி துவங்கும் விழாவில், மாலை, 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்ப ஆவாகணம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது.மறுநாள், 17ம் தேதி காலை, 8:00 மணிக்கு, கொடியேற்றம் நடைபெறும். ஒவ்வொரு நாளும், 10:00 மணிக்கு, திருமஞ்சனம், நம்மாழ்வார் சாற்றுமறை நிகழ்ச்சிகள் நடைபெறும்.இதேபோல், 17ம் தேதி முதல், மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் வெட்டிவேர் சப்பரம், சேஷ வாகனம், சந்திர பிரபை, பல்லக்கு, கருடசேவை, ஹனுமந்த, திருத்தேர், குதிரை உள்ளிட்ட வாகனங்களில், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில், போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !