உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (மே., 5ல்) நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (மே., 5ல்), சித்திரை மாத கிருத்திகை விழாவை யொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பாஞ்சமிர்தம் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடடன், வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், இரண்டு மணி நேரம் பொதுவழியில் நீண்ட வரிசை யில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !