உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தைய்யனார் கோவில் வடம் எடுத்தல் விழா

சாத்தைய்யனார் கோவில் வடம் எடுத்தல் விழா

 ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மஹா சாத்தைய்யனார் கோவில் வடம் எடுத்தல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மஹா சாத்தைய்யனார் கோவில் சித்திரை விழா மே 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பறை முழக்கமும் நடைபெற்றது. ஆறாம் நாளான நேற்று வடம் எடுத்தல் விழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து பனை நார்களால் பின்னப்பட்ட நீண்ட வடத்தை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று, ஊரின் நடுவே உள்ள அரச மரத்தில் வைத்து வழிபாடு செய்தனர்.விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான எருதுகட்டு விழா நாளை (மே 8 ) நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை சாத்தனூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !