உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் பக்தர்களுக்கு பலன் தந்த பிரத்யங்கரா தேவி யாகம்

சென்னையில் பக்தர்களுக்கு பலன் தந்த பிரத்யங்கரா தேவி யாகம்

சென்னை:பக்தர்களின் வாழ்வியல் தடைகளை நீக்க நடந்த, பிரத்யங்கரா தேவி யாகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவித்யா மகாகாளி பீடமும், அமா சர்வமங்களாவும் இணைந்து, ஒவ்வொரு மாதமும், கிருஷ்ணபக் ஷ சதுர்த்தசியில், பிரத்யங்கரா தேவி யாகத்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், இம்மாதம், 3ம் தேதி, அமாவாசைக்கு முந்தைய நாளில், சென்னை, மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள, காஞ்சி சங்கர மடத்தில், இந்த யாகம் நடந்தது.இதை, 108 அரிய மூலிகையைக் கொண்டு, குருஜி ஷாக்தஸ்ரீ கார்த்திக் விஸ்வநாதன் நடத்தினார்.இந்த யாகத்தில் பங்கேற்றால், திருமணத் தடைகள், மனக்கஷ்டங்கள், நோய் துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.பணி மேம்பாடு, கல்வி மேம்பாடு கிடைக்கும். நோயில் இருந்தும், பித்ரு தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். காரிய வெற்றி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதால், யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !