உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் மழை வேண்டி யாகம்

கோவையில் மழை வேண்டி யாகம்

கோவை:மழை வேண்டி, ஈச்சனாரி விநாயகர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் களில், நாளை (மே., 8ல்) சிறப்பு யாகம் நடக்கிறது.அறநிலையத்துறையின் கீழுள்ள, முக்கிய கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோவையில், கோட்டை சங்கமேஸ்வரர், பேட்டை உப்பார வீதியில் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், டவுன்ஹால், பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில், சிறப்பு யாகம் நடந்தது. நாளை (மே., 8ல்) பேரூர் பட்டீஸ்வரர் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில்களில், யாகம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு துவங்கும் யாகம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜையில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க, அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !