உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

அன்னுார்: கணேசபுரம் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. கணேசபுரம் சத்தி மெயின்ரோட்டில், பழமையான புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 26ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவவிழா கடந்த 28 ம்தேதி பொங்கல் விழாவுடன் துவங்கியது.

கம்பம் நடுதல், காப்பு கட்டுதல், பூவோடு வைத்தல் மே1ம் தேதி இரவு நடந்தது. மே 3ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலையில் பொங்கல் வைத்தல் நடந்தது. விநாயகருக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு, வாணவேடிக்கையுடன் அணிக்கூடை எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று காலையில் பூங்கரகம் எடுத்து வருதல், புற்றுக்கண் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மதியம் அலங்கார பூஜையும், அக்னிகரகம் எடுத்தல், அலகு குத்தி வருதலும் நடந்தது. கணேசபுரம், செம்மாணி செட்டிபாளையம், குருக்கம்பாளையம் உள்பட சுற்றுவட்டார மக்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !