உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவில்களில் மழைவேண்டி வருண யாகம்

விருத்தாசலம் கோவில்களில் மழைவேண்டி வருண யாகம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்தப்பட்டது.

அக்னி நட்சத்திரம் துவங்கியதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் மழைவேண்டி,  சிறப்பு வருண யாகம் நடத்திட உத்தரவிடப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மழை பெய்யவும், உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. பெரியநாயகர் சன்னதியில் புனிதநீர் கலசங்கள் வைத்து, உத்திரபாராயணம், நாதஸ்வரம், வயலின் இசையுடன் மேகராகம், தேவார இசை பாடப்பட்டது.

விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பிற்பகல் 1:00 மணியளவில் சுவாமிக்கு பன்னீர், ஏலம், பால், இளநீரால் சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது. இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் புனிதநீர் கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். மழை பெய்ய வேண்டி பால், தயிர், சந்தனம், திரவியப்பொடிகள், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !