ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது
ADDED :2345 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால், பக்தர்கள் பீதியடைந்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட செல்வது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்தை விட அக்னி தீர்த்தத்தில் கடலோரத்தில் 100 மீட்டர் துாரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியதால் பாசி படிந்த பாறைகள், கடல் சிப்பிகள் வெளியில் தெரிந்தது. இதனால் புனித நீராட வந்த பக்தர்கள் பீதியடைந்தனர். மாலை 3:00 மணிக்கு பிறகு கடல் நீர் மட்டம் உயர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தென் மேற்கு காற்றினால் கடலில் நிலவும் நீரோட்ட மாறுபாட்டினால் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியதாக கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.