சந்தனக்காப்பு அலங்காரத்தில் ராகவேந்திரர் அருள்பாலிப்பு
ADDED :2448 days ago
கடலுார்: கூத்தப்பாக்கம் பிருந்தாவனத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு ராகவேந்திரா சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம் பிருந்தாவனம் ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில் அட்சய திரிதியை முன்னிட்டு மாதவ சித்தநாத சேவா சங்கம் சார்பில், ராகவேந்திரருக்கு சிறப்பு ஹோமங்கள் நடைப்பெற்று, அபிஷேக ஆராதனை நடந்தது. ராகவேந்திரர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மாதவ சித்தநாத சேவா சங்க நிர்வாகிகள் குருமூர்த்தி, ராகவேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.