வால்பாறை காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2348 days ago
வால்பாறை:வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று (8ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று (மே., 7ல்) வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நேற்று (மே., 7ல்) மாலை, 5:00 மணிக்கு மோட்சம்தனை அளிக்கும் மோகன வள்ளிக்கு 3ம் கால யாக பூஜை நடந்தது. இன்று (8ம் தேதி) காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.