நெகமம் அருகே கரிவரதராஜ பெருமாளுக்கு அட்சய திருதியை வழிபாடு
ADDED :2455 days ago
நெகமம்:நெகமம் அருகே காட்டம்பட்டிபுதூரில், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அட்சய திருதி சிறப்பு வழிபாடு நடந்தது.நெகமம் அடுத்த காட்டம் பட்டிபுதூரில், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவிலில், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று 7ல், மாலை, கரிவரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை நடந்தது. தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு, வெள்ளி பூணூல் சாத்தப்பட்டது.தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.