நடுவீரப்பட்டு முத்துகிருஷ்ணாபுரத்தில் 10ம் தேதி தீமிதி திருவிழா
நடுவீரப்பட்டு:முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் வரும் 10 ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் திரவுபதியம்மன் கோவிலில்
வரும் 10 ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.
கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. கடந்த 6 ம் தேதி மாலை 4:00 மணிக்கு வெள்ளை குதிரையில் அய்யனார் வீதியுலா நடந்தது.நேற்று (மே., 7ல்) காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4:30 மணிக்கு பூரணி பொற்கலை சமேத குண்டுமணி அய்யனார் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று 8 ம் தேதி மாலை 4:00
மணிக்கு அர்ச்சுணன் திரவுபதியம்மன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை 9 ம் தேதி அர்ச்சுணன் தவசு, 10ம் தேதி காலை 7:00 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.
வரும் 11 ம் தேதி மஞ்சள்நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் விழாக்குழவினர் செய்து வருகின்றனர்.