பொன்விளைந்தகளத்தூர் அம்மன் கோவில் உற்சவம் துவக்கம்
ADDED :2455 days ago
கடலூர்:கூத்தப்பாக்கம் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் குதிரை விடுதல் செடல் உற்சவம் இன்று (மே., 8ல்) துவங்குகிறது.
கடலூர் அடுத்த கூத்தப்பாக்கம் பொன்விளைந்தகளத்தூர் அம்மனுக்கு சித்திரை உற்சவத்தையொட்டி குதிரை விடுதல், செடல் உற்வம் இன்று (மே., 8ல்) காப்புக்கட்டுதலுடன் துவங்குகிறது.
தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக் கிறது. நாளை (மே., 9ல்) அய்யனாருக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே., 9ல்) மறுநாள் காலை 9 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம், மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் முருகன் செய்கிறார்.