உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

பெண்ணாடம்:பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி, சிறப்பு வருண யாக பூஜை நடந்தது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் மழைவேண்டி யாகம் நடத்துமாறு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், செயல் அலுவலர்களுக்கு
உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (மே., 6ல்) காலை 7:30 மணியளவில் மூலவர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி ஆகிய
பொருட்களால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.காலை 10:00 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் மழைவேண்டி, வருண யாக பூஜை நடந்தது.

செயல் அலுவலர் கருணாகரன், கணக்கர் மலையப்பன் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !