உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உச்சி மகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை உச்சி மகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை:குடிமங்கலம், அடிவள்ளி உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நேற்று (மே., 8ல்) நடந்தது.

குடிமங்கலம் ஒன்றியம், அடிவள்ளி, கற்பக விநாயகர் சித்தி விநாயகர் குடலூர் மாரியம்மன், உச்சி மாகாளியம்மன், முனி முத்தாலம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 23ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.கடந்த மாதம் 30ம் தேதி, குடலூர் மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், கம்பத்துக்கு மஞ்சள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர். மே, 5ம் தேதி பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருதலும், 6ம் தேதி, அம்பாளுக்கு தீர்த்தம் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் (மே., 7ல்), இரவு, 9:00 மணிக்கு சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

திருவிழாவையொட்டி, நேற்று (மே., 8ல்) அதிகாலை, 5:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைக்கும்
வழிபாடும் நடந்தது. மாலையில், பக்தர்கள் பூவோடு எடுத்தனர்.

இன்று (மே., 9ல்), காலை, முத்தாலம்மன் சிலைகள் குடிசைக்கு கொண்டு வருதல், காலை, 9:00 மணிக்கு முளைப்பாலிகை எடுத்தல், இரவு, முத்தாலம்மன் ஊர் எல்லையில் விடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !