நாமகிரிப்பேட்டை தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை சித்திரை தேர் திருவிழாவில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தீ மிதித்தனர்.
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா, ஏப்., 23ல் தொடங்கியது. தினமும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வந்தது. மண்டகப்படி செய்து அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் அம்மன் ஊர்வலம், வண்டி வேடிக்கை நடைபெற்றது. நேற்று (மே., 8ல்) நடந்த தீ மிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில், கோவில் பூசாரிகள், பின்னர் பக்தர்கள், குழந்தைகள், அக்னி சட்டி எடுத்து வந்து, பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். பிரசாதமாக லட்டு, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. மாலை, தேரோட்டம் தொடங்கியது. எம்.பி., சுந்தரம் வடம் பிடித்து விழாவை தொடங்கி வைத்தார். டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.