உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழா

ப.வேலூர் ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழா

ப.வேலூர்: ஜேடர்பாளையம் அடுத்த, ஆனங்கூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 30ல் சுற்றுவட்டார பக்தர்கள், காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். பின்னர், கம்பம் நடுதல் நிகழ்ச்சி மற்றும் பூச்சாட்டுதல், கடந்த, 5ல் வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (மே., 8ல்) காலை, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் குடங்களுடன் ஊர்வலமாக செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று, சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பகவதியம்மன், காமாட்சியம்மன், மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. மாலை, பெண்கள் பொங்கல் வைத்து மஹா மாரியம்மன் முன் பொங்கல் படையல் வைத்து அபிஷேகம் செய்தனர். இரவு, பெண்கள் மாவிளக்கு பூஜை செய்தனர். வாண வேடிக்கை நடந்தது. இன்று (மே., 9ல்) காலை கிடாவெட்டுதல், கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லுதல், மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !