திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :2564 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், உண்ணாமுலைய ம்மன் உடனுறை அருணாச லேஸ்ரவர் கோவிலில், மழை வேண்டியும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலமாக இருக்க வேண்டியும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரம்ம தீர்த்தகுளத்தில், ரமேஷ் குருக்கள்
தலைமையில், 25க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வருண ஜெபம், ருத்ர பாராயணம் செய்தனர். அமிர்தவர்ஷினி ராகம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து, கல்யாண சுந்தரேஸ்வரர்
சன்னதியில், மழை வேண்டி யாகசாலை பூஜை நடந்தது. இதில், கணபதி பூஜை, சங்கல்பம், வருண ஜப வேள்வி, மஹாபூர்ணாஹூதி நடந்தன. யாகசாலையில் வைக்கப்பட்ட கலச புனிதநீர், பிரம்ம தீர்த்தத்தில் ஊற்றி கலக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.