உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதைந்த நிலையில் மலைப்பட்டி கோயில்: சொத்துகள் இருந்தும் சீரமைப்பு இல்லை

சிதைந்த நிலையில் மலைப்பட்டி கோயில்: சொத்துகள் இருந்தும் சீரமைப்பு இல்லை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே நூற்றாண்டு புகழ் வாய்ந்த கோயில் புனரமைப்பு இன்றி இடியும் நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ளது. மலைப்பட்டி, நூற்றாண்டிற்கு மேற்பட்ட நவநீத பால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது.பல பெருமைகள் பெற்ற இக்கோயிலில் திருமணங்கள் நடத்தினால் வாழ்க்கை ஆலமரமாய் தழைத்து நீடிக்கும் என்ற நம்பிக்கையில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. வெளியூர்களில் வந்து இங்கு திருமணங்களை நடத்தி செல்கின்றனர்.

புகழ் வாய்ந்த இக்கோயிலை புனரமைப்பு செய்யாமல் விட்டதால் இடியும் நிலையில் உள்ளது. மேற்கூரை பெயர்ந்துள்ளதால் பக்தர்கள் பயத்துடன் தான் தரிசிக்க வருகின்றனர்.

கோயிலை புனரமைப்பு செய்ய ஊர் பொதுமக்கள் பலமுறை இந்து சமய அறநிலையத்துறை யில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் ஒருமுறை வந்து பார்த்து சென்ற தோடு சரி. கோயிலுக்கு சொந்தமான ரூ. கோடிக்கணக்கான சொத்துக்கள் மதுரையில் இருப்பதாகவும், அதை முறையாக பயன்படுத்தி அதன்மூலம் வரும் வருமானத்தை கோயில் புனரமைப்பு பணிகளுக்கு செலவழிக்கலாம். என ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறையோ எதையும் கண்டு கொள்ளாது மெத்தனத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !