சோலைமலை முருகன் கோவிலில் வசந்த உற்ஸவ விழா
ADDED :2471 days ago
அலங்காநல்லூர்:மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் நேற்று (மே., 9ல்) வைகாசி மாத வசந்த உற்ஸவ விழா தொடங்கியது.இதையொட்டி தினமும் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை, சமேத சண்முகருக்கு ஷண்முகார்ச்சனை நடந்தது.மாலையில் உற்ஸவர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.தினமும் இதே விழாவில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனைகளும், சுவாமி புறப்பாடும் தொடர்ந்து நடைபெறும். மே 18ல் வைகாசி விசாக வசந்த உற்ஸவ திருவிழா நடக்கும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.