காஞ்சிபுரம் தங்க தேரில் ஆதிசங்கரர் உலா
ADDED :2474 days ago
காஞ்சிபுரம்:ஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று (மே., 9ல்), ஆதிசங்கரர், தங்க தேரில் உலா வந்தார்.காஞ்சிபுரம் சங்கரமடத்தில், 5ம் தேதி, ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
ஆதிசங்கரரின் ஜெயந்தி தினமான நேற்று காலை, ஆவஹந்தி ஹோமம், விசேஷ அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.நேற்று இரவு, அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், ஆதிசங்கரர் எழுந்தருளினார். பல்வேறு இசை வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சங்கரமடத்தை, தேர் அடைந்தது. அங்கு, ஆதிசங்கரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனைகள் நடந்தன. வழிநெடுகிலும்,
ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.