உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம்

மாமல்லபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.ராமானுஜர், சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தார். இந்நாளான நேற்று, (மே., 9ல்), இக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, பெருமாள், தேவியர், ராமானுஜர் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாடு நடந்தது.தொடர்ந்து, திருவாய்மொழி சாற்றுமறை சேவை யாற்றி, ராமானுஜருக்கு, பெருமாள், பரிவட்டமரியாதை அளித்தார்.

குன்னத்தூர் பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இக்கோவில் சார்பில், ஸ்ரீபெரும்புதூர் கோவிலில், இன்று (மே., 10ல்), பரிவட்டம், பிரசாதம்வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !