குளித்தலை கோவில் விழாவுக்கு ஆற்றில் நீர் எடுக்க குழாய் அமைப்பு
ADDED :2483 days ago
குளித்தலை: குளித்தலை, முத்துபாலசமுத்திரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 5ல் தொடங்கியது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வருவார்கள். காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில், பக்தர்கள் குளிக்க ஏதுவாக கடம்பர்கோவில் காவிரி படித்துறை, பெரியபாலம் பரிசல்துறை ஆகிய இடங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் குழாய் அமைக்கப்பட்டு, குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.