ஊட்டி முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2483 days ago
ஊட்டி:ஊட்டி அடுத்துள்ள கீழ் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. மே மாதத்தின் கிருத்திகை பூஜை நேற்று
(மே., 9ல்) நடந்தது. காலை, 10:00 மணிக்கு விநாயகர், ஹெத்தையம்மன் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.