உடுமலை மழை வேண்டி திருமூர்த்திமலையில் யாகம்
ADDED :2489 days ago
உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று (மே., 9ல்) நடந்தது.பருவ மழைப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து. வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிவன்,
விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளி வரும், திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று (மே., 9ல்) நடந்தது.காலை, 9:00 மணிக்கு, வருண ஜெபம் மற்றும் கலசம் நிறுவி, யாக பூஜைகள் மற்றும் மழைப்பதிகம் பாடப்பெற்றது. தொடர்ந்து, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.