உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம்

கோவையில் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம்

கோவை: ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஜூன் 30ம் தேதி, குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் (பூணூல் அணிவித்தல்) இலவசமாக நடக்கிறது.கோவை, ராம்நகரில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் இலவசமாக நடக்கிறது. இந்தாண்டுக்கான பூணூல் அணிவித்தல் நிகழ்ச்சி, ஜூன் 30ம் தேதி காலை, 9:45 மணிக்கு, நடக்கிறது.

முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், 6:30 மணிக்கு, உதகசாந்தி பூர்வாங்கமும் நடக்கின்றன. உபநயனத்தை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, ப்ரும் மோபதேசம், 11:00 மணிக்கு, மகாசீர்வாதமும் நடக்கின்றன.தங்கள் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் செய்ய விரும்பும் பெற்றோர், ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர், கோவை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0422 - 223 6059 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை, ஐயப்பன் பூஜா
சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !