நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
ADDED :2493 days ago
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே காந்தி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம், தெக்குப்பாளையம், காந்திநகர் -1ல் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், 38ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து கம்பம் எடுத்து வருதல், அணிக்கூடை கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் 8 ல், காலை சக்தி கரகம் அழைத்தல், அம்மனுக்கு திருக்கல்யாணம், அன்னதானம், மாவிளக்கு எடுத்து வருதல், பால் கரகம், அக்னி கரகம், அன்னமார் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் கோவிலை வந்தடைதல், கம்பம் எடுத்து கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (மே., 9ல்)மஞ்சள் நீராடுதல், அபிஷே பூஜைகள் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.