கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
ADDED :2311 days ago
பிரசித்தி பெற்ற கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை ஏப். 17 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், ஆயிரம் கண்பானை,உருண்டு கொடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அக்னி சட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எடுத்தனர்.பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால்நடைபெறவில்லை. தொடர்ந்து 21 நாட்கள் நடைபெற்ற திருவிழா நேற்று முன் (மே., 8ல்)தினத்துடன் நிறைவடைந்தது.