சேலத்தில் ராமானுஜரின் 1002வது அவதார திருநட்சத்திர விழா
ADDED :2311 days ago
சேலம்: ராமானுஜருக்கு 108 கலச புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம் எருமாபாளையம் ஏரிக்கரையிலுள்ள ராமானுஜர் மணிமண்டபத்தில் நேற்று (மே., 9ல்) காலை சுப்ரபாத சேவையுடன் ஸ்ரீமத் ராமானுஜரின் 1002வது திருநட்சத்திர விழா தொடங்கியது. ராமானுஜருக்கு திருவாராதனம் செய்யப்பட்டது. மகா மண்டபத்தில் திரளான பக்தர்கள் முன் 108 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு அபிஷேகம் நடந்தது. தியாகராஜன் குழுவினரின் புல்லாங்குழல் இசை, பத்மினி கேசவகுமார் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், ஹரீஷ்குமாரின் இன்னிசை கச்சேரி நடந்தன.