கம்மாபுரம் அரசக்குழி முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :2442 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அரசக்குழி முத்துமாரியம்மன் கோவிலில், இன்று (14ம் தேதி) செடல் திருவிழா நடக்கிறது.விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தார்.இன்று 14ம் தேதி காலை 9:00 மணியளவில் செடல் உற்சவம், பால்குடம் சுமந்து வீதியுலா நடக்கிறது.