நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி உற்சவம்
ADDED :2339 days ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவை யொட்டி, நேற்று (மே., 13ல்) பஞ்சமூர்த்தி உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 6 ம் தேதி துவங்கியது. மறுநாள் 7ம் தேதி மதியம் பிடாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், தினமும் மின் அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று பஞ்சமூர்த்தி உற்சவம் நடந்தது.
இதில் ராமலிங்கேஸ்வரர் மூலவ உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பரமணிய சுவாமி ஜோடிக்கப்பட்டு பஞ்சமூர்த்தி உற்சவம் நடந்தது. தொடர்ந்து சன்னதி புறப்பாடும், சுவாமி வதியுலா நடந்தது. வரும் 15ம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவமும், 17 ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.