மகா கால பைரவர் கோவிலில் தேர் திருவிழா
ADDED :2447 days ago
ஊத்துக்கோட்டை: மகா கால பைரவர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவை ஒட்டி, உற்சவர் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில்.இக்கோவிலில், நேற்று முன்தினம், சித்திரை மாத திருவிழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பொங்கல் வைத்து, ஆதிபைரவருக்கு படைத்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பின், மூலவர் மகா கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றன.