திருவாதவூர் திருமறைநாதருக்கு திருக்கல்யாணம்
ADDED :2349 days ago
மேலுார், மேலுார் அருகே திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி திருமறைநாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மேலுாரை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர். பின் திருக்கல்யாணம் விருந்து நடந்தது. கோயில் இணை கமிஷனர் நடராஜன், பேஷ்கார் திரவியக்குமார் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்று(மே 17) தேரோட்டம் நடக்கிறது.