உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அம்மன் கோவில் திருவிழா

கரூர் அம்மன் கோவில் திருவிழா

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சுண்டுகுழிப்பட்டியில் அக்னி பாப்பாத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. முதல் நிகழ்ச்சியாக, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, மாயவர் பூஜை, அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், இரண்டாம் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை, சூலை ஆடு குத்தி வழிபாடு
செய்தல், பூஜை கூடை அழைத்து வருதல் உள்பட பல்வேறு பூஜைகளுடன் முப்பூஜை விழா நடந்தது. விழாவில் கடவூர், தரகம்பட்டி, ஒட்டன்சத்திரம், கொள்ளப்பட்டி, ராமரெட்டியபட்டி,
தொப்பாநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !