உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேகம்

வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேகம்

வால்பாறை:வால்பாறை, வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேக விழா நேற்று (மே., 16ல்) நடந்தது.

வால்பாறை, வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி திருக்கோவில் துவங்கி, 59 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.விழாவில், நேற்று முன் தினம் (மே., 15ல்) மாலை, 5:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் மற்றும் புதிய கொடி ஆகியவை எடுத்து, தாலப்பொழியுடன் பக்தர்கள் ஊர்வலமாக ஐயப்ப சுவாமி கோவிலுக்கு வந்தனர்.நேற்று காலை, 11:00 மணிக்கு கொடிமரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !