சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கோவிலில் தேரோட்டம்
ADDED :2492 days ago
கடலூர்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி திருத் தேரோட்டம் இன்று (மே., 16ல்) நடக்கிறது. கடலூர் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு வாகனத்தில் வீதி உலாக்காட்சி நடக்கிறது. 13ம் தேதி நடந்த ஐந்தாம் நாள் உற்சவமான கருடசேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (மே., 16ல்) திருத்தேரோட்டத்தையொட்டி லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரா தனை நடைபெறும். சுவாமி புறப்பாடு செய்து, 6 மணிக்கு தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெறும்.