உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம ஜெயந்தி விழா கோவில்களில் கோலாகலம்

நரசிம்ம ஜெயந்தி விழா கோவில்களில் கோலாகலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி, லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு ஆராதனை, அனுக்ஞை, மகா சங்கல்பம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு ஏழு விதமான ஹோமங்கள், திரவியாகுதி, பூர்ணாகுதி, நைவேத்திய பூஜை, அலங்கார பூஜை, மகாதீபாராதனை, சாற்றுமுறை, அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், சுவாமி திருவீதி உலா, வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.அதேபோல், ஆனைமலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன. வெப்பரை பதி செல்லும் வழியிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !